வெலிகடை சிறைச்சாலைக்குள் மது போதையில் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அநுராதபுர சிறைச்சாலைக்கு ஹெலிகப்டரில் சென்று, அங்கு கைதிகளை முழந்தாழிட வைத்து துப்பாக்கியால் மிரட்டிய சம்பவமும் இடம்பெற்றிருந்தது.
வெலிகடைக்கு தனது நண்பர்களை அழைத்துச் சென்றது போலவே அநுராதபுரத்துக்கும் பெண் ஒருவர் உட்பட சிலரை அழைத்துச் சென்றது லொஹான் ரத்வத்தவே என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் லொஹான் பதவி விலக வேண்டும் என பரவலான அழுத்தம் உருவாகியுள்ளது.
கையில் துப்பாக்கியுடன் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக லொஹான் மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment