சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகளின் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்துக் கொண்டு, சிறைச்சாலைகளுக்குள் குடி போதையில் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்ட செயற்பாடுகளின் பின்னணியில் அதற்கான பொறுப்பையேற்று இராஜினாமா செய்துள்ளார் லொஹான் ரத்வத்த.
எனினும், இரத்தினக்கல் மற்றும் அது சார்ந்த தொழில்நடவடிக்கைகளுக்கான இராஜாங்க அமைச்சு தொடர்பில் அவர் தரப்பு மௌனம் காப்பதினால் தொடர்ந்தும் அவர் அமைச்சராகவே கருதப்படுவார் என பெரமுன தரப்பு தெரிவிக்கிறது.
தனது பொழுது போக்கிற்காக அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட லொஹான், அரசுக்கு சங்கடத்தைத் தவிர்க்கவே சிறைச்சாலை தொடர்பிலான பொறுப்பிலிருந்து விலகியதாக விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment