தடுப்பூசி: சுதர்ஷனியின் கூற்றுக்கு அரசுக்குள் எதிர்ப்பு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 28 September 2021

தடுப்பூசி: சுதர்ஷனியின் கூற்றுக்கு அரசுக்குள் எதிர்ப்பு!

 


12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குதல் ஆபத்தானது என கொரோனா அமைச்சர் சுதர்ஷனி பெர்னான்டோ புள்ளே தெரிவித்த கருத்தை நிராகரித்துள்ளது அரசு.


அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்கான ஊடக சந்திப்பில் அதனை மறுத்த அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரன, 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது நன்மையேயன்றி தீமையில்லையென விளக்கமளித்துள்ளார்.


தற்சமயம், தெரிவு செய்யப்பட்ட சிறுவர்க்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment