இந்தியாவுக்கு ஆயுதம் மற்றும் போதைப் பொருள் கடத்திய விவகாரத்தின் பின்னணியில் இலங்கையரான அரசரத்தினம் ரமேஷ் என அறியப்படும் நபரைக் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் மீன்பிடி படகொன்றில் ஏ.கே 47 உட்பட ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில் அப்படகில் குறித்த நபரும் இருந்ததாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில், முன்னதாக சுரேஷ் ராஜ் என அறியப்படும் நபர் கைது செய்யப்பட்டிருந்த அதேவேளை ரமேஷ் அவரது சகோதரன் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment