நீர் வழங்கலுக்கான கட்டணத்தை அதிகரிக்கும் எண்ணம் எதுவுமில்லையென்கிறார் அமைச்சர் வாசுதேவ நானாயக்கார. மாறாக, அதனைக் குறைப்பதற்கான வழியைத் தாம் தேடிக் கொண்டிருப்பதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
வர்த்தக நிலையங்களுக்கான நீர் விநியோகத்தின் ஊடாக மேலதிக இலாபத்தை ஈட்டும் வகையிலான திட்டத்தை உருவாக்கி, அதனைக் கொண்டு வீடுகளுக்கான நீர்க் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்குத் தாம் முயற்சி செய்வதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
உணவுப் பொருட்களின் விலையுயர்வையடுத்து அத்தியாவசிய சேவைகளினது விலையுயர்வும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment