அட்டைத் தொழில் நிமித்தம் முல்லைத்தீவு கடற்பகுதியில் சுழியோடச் சென்ற குச்சவெளியை வசிப்பிடமாகக் கொண்ட பாசாத் எனும் இரு குழந்தைகளின் தந்தை காணாமல் போயுள்ள நிலையில் கடற்பரப்பில் தேடல் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.
ஆழ் கடற் பகுதிக்கு இவருடன் சென்ற மேலும் ஒருவர் படகுக்குத் திரும்பிய போதிலும், உதவிக்கான கயிறு அறுந்திருந்த நிலையில் குறித்த நபரைக் காணவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
கடற்படையுதவியுடன் நான்கு தினங்களாக தேடல் நடவடிக்கை இடம்பெற்ற போதிலும் இதுவரை எதுவித தடயங்களோ அல்லது உடலமோ கிடைக்கப் பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
- Faisar
No comments:
Post a Comment