வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதியும் பிரதமரும் நாடு திரும்பும் வரை நாட்டின் ஆட்சிப் பொறுப்பு நிதியமைச்சரான பசில் ராஜபக்சவிடமே உள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன.
சம்பிரதாயபூர்வமாக இப்பொறுப்பு நாட்டின் மூன்றாவது தலைவராகக் கருதப்படும் சபாநாயகரிடமே இருக்கும் என்பதோடு அவ்வாறே கடந்த காலத்தில் பாக்கீர் மாக்கார் நாட்டின் பொறுப்பாளியாக கருதப்பட்டிருந்தார்.
எனினும், தற்போது பசில் ராஜபக்சவிடமே ஆட்சிப் பொறுப்பு உள்ளதாக ரோஹித தெரிவிக்கின்றமையும் அமைச்சரவை கூட்டம் அவரது தலைமையிலேயே இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment