நவம்பரில் நாடு வழமைக்கு திரும்பி விடும்: அமைச்சர் - sonakar.com

Post Top Ad

Sunday, 26 September 2021

நவம்பரில் நாடு வழமைக்கு திரும்பி விடும்: அமைச்சர்



நவம்பர் இரண்டாம் வாரமளவில் நாடு வழமைக்குத் திரும்பி விடும் என்கிறார் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன.


தற்சமயம், தொற்றாளர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ள இந்த சூழ்நிலையை தொடர்ந்தும் பாதுகாப்புடன் பேண வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் தெரிவிக்கின்ற அவர், பெரும்பாலும் நவம்பர் நடுப்பகுதியில் நாடு வழமைக்குத் திரும்பி விடும் என்கிறார்.


சுற்றுலாத்துறையை மீள ஆரம்பிப்பதற்கான தீவிர முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதுடன் நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப உலகமெங்கும் கடன் கேட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment