நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு சமகி ஜன பல வேகய தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், தான் செய்த தவறுக்காக அனைத்து நீதிபதிகளிடமும் ரஞ்சன் பகிரங்கமாக மன்னிப்பு கோரினால் இது குறித்து அரசு பரிசீலிக்கும் என விளக்கமளித்துள்ளார் அமைச்சர் லொஹான் ரத்வத்தை.
எனினும், தான் ஒரு போதும் மன்னிப்பு கோரப் போவதில்லையென ரஞ்சன் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment