பெற்றோலிய கூட்டுத்தாபன நிதி நெருக்கடியை சமாளிக்க பல நாடுகளிடம் கடன் கேட்டு வரும் இலங்கை, ஈரானிடம் திரும்பவும் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளது.
இப்பின்னணியில் ஈரானிய மத்திய வங்கி ஆளுனரை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள பெற்றோலியத்துறை அமைச்சர் கம்மன்பில, ஈரானுக்கான பிரத்யேக ஏற்றுமதி வர்த்தகம் ஊடாக கடனை அடைப்பதற்கான வழிமுறைகள் குறித்துப் பேசியுள்ளார்.
ஏலவே ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதான எண்ணை நிறுவனத்தோடும் பேச்சுவார்த்தை நடாத்திய அதேவேளை, அமெரிக்காவிடமும் 500 மில்லியன் டொலர் கடன் கேட்டு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment