கொரோனா பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு மதுக்கடைகளைத் திறப்பதற்கு அனுமதி வழங்கிய அமைச்சரவையை நினைத்து வெட்கப்படுவதாக விசனம் வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க.
விஞ்ஞானபூர்வமாக அமைக்கப்பட்ட அமைச்சரவை என கூறிக்கொண்டு இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வது ஏற்புடையதா என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
கொரோனா அச்சம் இன்னும் நீங்காத நிலையில், இவ்வாறான செயற்பாடுகள் நாட்டை மேலும் ஆபத்தான சூழ்நிலைக்குள் தள்ளியிருப்பதாக அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment