சதொச 'பூண்டு' ஊழல் தொடர்பில் செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனங்களின் எடிட்டர்கள், செய்தியாளர்கள் உள்ளடங்கலாக ஆறு பேரை சி.ஐ.டியினர் விசாரணைக்கு அழைத்திருந்த நிலையில் பிரதமரின் தலையீட்டில் குறித்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்காக மன்னிப்புக் கேட்பதாக தெரிவிக்கிறார் அமைச்சர் சரத் வீரசேகர.
நுகர்வோர் அதிகார சபையின் பிரதானி பதவி விலகிய தருவாயில், சதொச ஊழல்கள் தொடர்பில் வெளிக்கொணர்ந்த தகவல்களை விரிவாக வெளியிட்டதன் பின்னணியிலேயே ஊடகவியலாளர்களை சி.ஐ.டியினர் விசாரிக்க முற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment