கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பணிகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக பங்காளி கட்சிகள் அதிருப்தி வெளியிட்டுள்ள நிலையில் இன்று பிற்பகல் அவசர சந்திப்பொன்றை நடாத்தவுள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
ஜனாதிபதியின் சகாக்கள் மற்றும் திட்டங்களுடன் விமல் வீரவன்ச குழு தொடர்ந்து முறுகலில் ஈடுபட்டு வருவதன் பின்னணியில் உறவை சீர்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
மத்திய கொழும்பின் முக்கியமான மூன்று நிலப்பகுதிகளையும் 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment