மேலும் ஒரு சிக்கலில் ரிசாத் பதியுதீன் - sonakar.com

Post Top Ad

Thursday, 2 September 2021

மேலும் ஒரு சிக்கலில் ரிசாத் பதியுதீன்

 


சிறைச்சாலையில் கைத்தொலைபேசி வைத்திருந்ததாக புதிய சிக்கலுக்குள்ளாகியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன்.


சிறைக்கூடத்தில் அவர் தொலைபேசியில் உரையாடுவது கேட்டு, அதனைப் பார்வையிடச் சென்ற போது ஜன்னல் ஊடாக கைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்ததாக தெரிவிக்கப்படுகிது.


இப்பின்னணியில் அவருக்கு எதிராக சிறைச்சாலை நீதிமன்றில் விசாரணை இடம்பெறவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமையும், வைத்தியசாலையில் இருந்த வேளையில் மருந்துகளை ஜன்னல் ஊடாக வீசியெறிந்த குற்றச்சாட்டுக்குள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தகக்கது.

No comments:

Post a Comment