பிரபல பொப்பிசை பாடகரும் ஜிப்சிஸ் இசைக்குழுவின் தலைவருமான சுனில் பெரேராவின் மறைவுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தமது அனுதாபங்களை வெளியிட்டுள்ளனர்.
அவரின் இழப்பு இசையுலகுக்கு பேரிழப்பு என இருவரும் சுட்டிக்காட்டியுள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுனில் பெரேரா, சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருந்த நிலையில் மீண்டும் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தனியார் வைத்தியசாலையொன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நியுமோனியாவினால் உயிரிழந்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment