சிறைச்சாலைகளுக்குள் புகுந்து அடாவடி செய்து, கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள லொஹான் ரத்வத்தைக்கு எதிராக இதுவரை யாரும் பொலிசில் முறைப்பாடு செய்யவில்லையென தெரிவிக்கிறார் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர.
அவ்வாறு முறைப்பாடு இருந்தால் இது தொடர்பில் நடவடிக்கையெடுப்பதற்குத் தாம் தயார் எனவும் தெரிவிக்கின்ற அவர், லொஹானிடம் கைத்துப்பாக்கிக் கான அனுமதிப் பத்திரம் இருப்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.
எனவே, முறைப்பாடு பதியப்பட்டாலேயே இது தொடர்பில் நடவடிக்கையெடுக்க முடியும் என அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment