பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பணப் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகம் உட்பட பல நாடுகளிடம் 'கடன்' கேட்டு வரும் அமைச்சர் உதய கம்மன்பில எதிர்வரும் வாரம் டுபாய் பயணிக்கவுள்ளார்.
மன்னாரில் உள்ள எண்ணை வளத்தைப் பயன்படுத்தினால் நாட்டின் கடன்களைத் தீர்த்து, பொருளாதார பிரச்சினைகளை இல்லாமலாக்கி விடலாம் என பிரச்சாரம் செய்து வரும் கம்மன்பில இது தொடர்பில் அமீரகத்தில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கிறார்.
மத்திய கிழக்கின் பிரபல எண்ணை உற்பத்தி நிறுவனம் ஒன்றுடன் பிரத்யேக பேச்சுவார்த்தை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment