செப்டம்பர் 20ம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் தாக்குதலுக்குள்ளாகப் போகிறது என தெரிவித்து அனுப்பப் பட்டிருந்த மின்னஞ்சல் போலியானது என விளக்கமளித்துள்ளார் பாதுகாப்பு செயலாளர்.
எனவே, இது தொடர்பில் மக்கள் பதற்றமடையத் தேவையில்லையென அவர் விளக்கமளித்துள்ளார்.
ஆயினும், விமான நிலைய பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமையும் குறித்த மின்னஞ்சலில் பெயர் குறிப்பிடப்பட்ட நால்வரை விடுவிக்குமாறு கோரியே இவ்வாறு எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment