வெளிநாடுகளிலிருந்து உள்ளாடைகளை இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது தொடர்பாக சமூக மட்டத்தில் பாரிய விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், உள்ளாடை இல்லையென்று யாரும் உயிரிழக்கப் போவதில்லையென விளக்கமளித்துள்ளார் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம.
உள்ளாடைகள் இல்லையென்று விமர்சனங்கள் வெளி வருகின்றன, அவை இல்லையென்று உயிராபத்து வரப் போவதில்லை, ஆனால் கொரோனாவால் உயிர்கள் பலியாகின்றன. எனவே, அதற்குரிய தடுப்பு நடவடிக்கைகள் அவசியப்படுகிறது என திலும் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, உள்ளாடைகளை கூட இறக்குமதி செய்யும் நிலையிலேயே நாடு இத்தனை காலம் இருந்தமை குறித்து எண்ணி மக்கள் வெட்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment