உயர் நீதிமன்ற வழக்கு நிலுவையின் பின்னணியில் முன்னாள் ஆளுனர் அசாத் சாலியின் விளக்கமறியலை ஒக்டோபர் 12ம் திகதி வரை இன்று நீடித்துள்ளது கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம்.
மார்ச் மாதம் அவர் நடாத்தியிருந்த ஊடக சந்திப்பின் போது தெரிவித்த 'சமாதான' கருத்துக்களை திரிபாக்கி ஊடகங்கள் வெளியிட்ட காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு கைது செய்யப்பட்டமையை ஏலவே நீதிபதி கண்டித்திருந்த போதிலும், உயர் நீதிமன்றில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் மஜிஸ்திரேட் நீதிமன்றில் பிணை பெற முடியாது என அசாத் சாலி தரப்பு விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில், இன்றைய விளக்கமறியல் நீடிப்பு வழமையானது எனவும் எதிர்வரும் ஒக்டோபர் 4ம் திகதியளவில் உயர் நீதிமன்றில் தமது பிணை மனு மீதான விசாரணை எதிர்பார்க்கப்படுவதாகவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
திரிபான செய்தி வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்திய ஊடகங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என கடந்த தவணையில் கொழும்பு மஜிஸ்திரேட் சுட்டிக்காட்டியிருந்ததோடு சர்ச்சைக்குரிய செய்தியாளர் சந்திப்பில் அசாத் சாலி நாட்டின் பாதுகாப்புக்கோ இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கோ எவ்வித பங்கமும் வரும் வகையில் எதையும் பேசியிருக்கவில்லையெனவும் நீதிபதியின் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment