சிறைச்சாலையில் நன்னடத்தையின் பின்னணியில் தகுதியுள்ள சிறைக்கைதிகள் தமது வீடுகளுக்குச் சென்று குடும்பத்துடன் ஒரு வாரம் தங்கியிருக்கும் வகையில் விடுமறை வழங்குவதற்கான திட்டம் ஆலோசிக்கப்படுவதாக தெரிவிக்கிறார் நீதியமைச்சர் அலி சப்ரி.
குறித்த நபருக்கு எதிரான வழக்கு, சூழ்நிலை, அவரது நன்னடத்தை போன்ற பல்வேறு காரணிகள் ஆராயப்பட்டு இதற்கான ஏற்பாடு செய்யப்படும் எனவும் இது குறித்து ஜனாதிபதியுடன் விரிவாக பேசவுள்ளதாகவும் நீதியமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
சிறைக் கைதிகளும் மனிதர்களே என சுவர்களில் எழுதுவதோடு நிறுத்தாமல் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என அவர் மேலும் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment