வெலிகடை சிறைச்சாலை அமைந்திருந்த 40 ஏக்கர் நிலப்பகுதியில், 35 ஏக்கரைப் பயன்படுத்தி நட்சத்திர ஹோட்டல் ஒன்று உருவாகப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலையை ஹொரனையில் 200 ஏக்கர் நிலப்பகுதிக்கு மாற்றுவதற்கான தீர்மானம் ஏலவே மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இத்திட்டத்துக்கு முதலீட்டாளர்கள் பலர் முன் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹொரன - மிலேவ பகுதியில் உருவாக்கப்படவுள்ள சிறைச்சாலை வளாகத்தில் பெண்களுக்கான சிறைச்சாலை, பாடசாலை, குழந்தைகளுக்கான நிலையம், வைத்தியசாலை உட்பட பல வசதிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment