நாட்டுக்குள் சட்டவிரோதமாக மருந்து வகைகளை கடத்த முயன்ற இரு இந்திய பிரஜைகள் இன்று காலை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து கொழும்பு வந்த இந்தியன் எயார்லைன்ஸ் விமானத்திலேயே குறித்த நபர்கள் பயணித்ததாகவும் நாட்டுக்குள் கொண்டு வர சட்டபூர்வமான அனுமதியில்லாத 10 மருந்து வகைகள் கைப்பற்றப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை வருவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விமான சேவைகள் மீள ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment