நியுசிலாந்து பாதுகாப்பு தரப்பின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த இலங்கை நபர் ஒருவர், பல்பொருள் அங்காடியொன்றில் சுமார் ஆறு பேரை கத்தியால் குத்திக் காயப்படுத்திய சம்பவத்தின் பின்னணியில் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் விளக்கமளித்துள்ளார்.
2011ம் ஆண்டு நியுசிலாந்து சென்றிருந்த குறித்த நபர், ஐ.எஸ். அமைப்பின் தீவிரவாத கொள்கையில் இருந்து வந்ததாகவும் இதன் பின்னணியில் பாதுகாப்பு பிரிவினரால் நீண்டகாலம் கண்காணிக்கப்பட்டு வந்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த போது, முடிந்தளவு விரைவாக செயற்பட்டதாகவும் இப்பின்னணியிலேயே குறித்த தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment