தேசிய சிறைக்கைதிகள் தினமான செப்டம்பர் 12ம் திகதி ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார் என தான் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் பல தடவைகள் சமகி ஜன பல வேகய வேண்டுகோள் விடுத்திருந்தது.
ரஞ்சன் மன்னிப்புக் கோரினால் விடுவிக்கப்படுவார் என அண்மையில் லொஹான் ரத்வத்த தெரிவித்திருந்தமையும் சஜித் முதற்தடவையாக தேதி குறிப்பிட்டு தனது எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment