கிழக்கிலங்கையின் பல இடங்களில், மாலைதீவுக்கு அனுப்புவதற்காக மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும் அதன் பின்னணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் ஒருவர் இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.
இந்நடவடிக்கைக்கு பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் துணைபோவதாக அவர் தெரிவித்திருந்த நிலையில் அவ்வாறு ஒரு விடயத்தை சாணக்கியன் நிரூபித்தால் அமைச்சுப் பொறுப்பிலிருந்து மாத்திரமன்றி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறக்கத் தயார் என சவால் விடுத்துள்ளார் மஹிந்த அமரவீர.
சாணக்கியனின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவையெனவும் அதில் உண்மையில்லையெனவும் ஆளுந்தரப்பிலிருந்து மறுப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment