லொஹான் ரத்வத்த அநுராதபுர சிறைச்சாலை சென்று அங்குள்ள தமிழ் கைதிகளை தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய சம்பவம் பற்றிய சூடு தனிய முன்பதாக கைதிகளின் 'வேண்டுகோளின்' பேரில் அநுராதபுர சிறைச்சாலைக்கு விஜயம் செய்துள்ளார் அமைச்சர் நாமல் ராஜபக்ச.
அங்கு சென்ற அவர், தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து அவர்களை குறைகளைக் கேட்டறிந்ததாகவும் தண்டனை முடிந்ததும் அவர்களது புனர்வாழ்வு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
குறித்த சம்பவத்தின் பின்னணியில் சிறைச்சாலை தொடர்பான தனது இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment