அசர்பைஜானிடமும் உதவி கேட்டுள்ள கம்மன்பில - sonakar.com

Post Top Ad

Thursday, 30 September 2021

அசர்பைஜானிடமும் உதவி கேட்டுள்ள கம்மன்பில

 



நாட்டின் எரிபொருள் பிரச்சினையை சமாளிப்பதற்கு உலகின் பல நாடுகளிடம் உதவி கேட்டு வரும் அரசாங்கம் அசர்பைஜானிடமும் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளது.


இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 70 பில்லியன் ரூபா நஷ்டத்தில் இயங்கி வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர் கம்மன்பில, நிலைமையை சமாளிப்பதற்கான முயற்சிகளின் பகுதியாக அசர்பைஜானிடமும் பேச்சுவார்த்தை நடாத்திய தகவலை வெளியிட்டுள்ளார்.


இதேவேளை, இலங்கையில் உள்ள எண்ணை வளத்தை உபயோகித்தால் நாட்டின் அனைத்து கடன்களையும் அடைக்க முடியும் எனவும் கம்மன்பில அவ்வப்போது தெரிவித்து வருகின்றமையும் அண்மையிலும் கொழும்பில் பெறுமதியான இரு காணிகளை அரசு 99 வருட குத்தகைக்கு விட தீர்மானித்துள்மையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment