ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹ்ரானின் கைத்தொலைபேசியை வெளிநாட்டு புலனாய்வு குழுவொன்று எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் தயாசிறி ஜயசேகர.
தாக்குதல் இடம்பெற்ற பின்னர் கைத்தொலைபேசியின் 'மதர்போர்ட்' வெளிநாட்டுக்குக் கொண்டு சென்றுள்ளதன் பின்னணியில் இருப்பவர்களை ஆராய்ந்தால் குறித்த தாக்குதலோடு தொடர்பு பட்டவர்களை விரைவாகக் கண்டுபிடிக்கலாம் எனவும் முன்னாள் ஆட்சியாளர்களையும், மைத்ரிபால சிறிசேனவையும் தொடர்பு படுத்தி காரியத்தை மூடி மறைக்க முயல்வதாகவும் தயாசிறி விளக்கமளித்துள்ளார்.
முக்கிய ஆதாரம் ஒன்றை வெளிநாடு ஒன்றின் புலனாய்வுத்துறையினருக்கு வழங்கியதன் பின்னணியில் நடைமுறை அரசின் முக்கியஸ்தர்கள் இருப்பதாக அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment