பதவிக்கு வருவதற்காக, ஈஸ்டர் தாக்குதலைத் திட்டமிட்டு நடாத்தியது ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவே என மக்கள் மத்தியில் தவறான சிந்தனையை உருவாக்குவதற்கு 'தந்திரமான' வேலைகள் இடம்பெற்று வருவதாகவும் அதில் எவ்வித உண்மையுமில்லையெனவும் தெரிவிக்கிறார் பாதுகாப்பு செயலாளர்.
குற்றவியல் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிசார் பரந்த அளவில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அதனடிப்படையில் வழக்குகள் தொடரப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கும் அவர், இதில் எவ்வகையிலும் ஜனாதிபதி தொடர்புபடவில்லையென விளக்கமளித்துள்ளார்.
எனினும், அரசின் முக்கிய பொறுப்பிலுள்ளவர்களும் தொடர்பிருப்பதனாலேயே விசாரணைகள் மந்த கதியில் நடப்பதாக கார்டினல் மல்கம் ரஞ்சித் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment