கடந்த வெள்ளிக்கிழமை நியுசிலாந்தில் இடம்பெற்ற பயங்கரவாத செயலினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அனுதாபம் வெளியிட்டு, கரிசணையுடனும் ஒத்துழைப்புடனும் நடந்து கொள்ளும் இலங்கை மக்களுக்கு நியுசிலாந்து தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது.
பொது மக்கள், சமய மற்றும் சமூக அமைப்புகளிடமிருந்து பெருமளவு தொடர்பாடல் இடம்பெற்றிருப்பதாகவும் இது நெகிழ்வைத் தருவதாகவும் இலங்கைக்கான தூதர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளும் இவ்விடயத்தில் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாகவும் தேவையான ஒத்துழைப்பு கிடைப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment