பம்பலபிட்டியில் காணியொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து இருவரைத் தாக்கிய சம்பவத்தின் பின்னணியில் முதலில் தேடப்பட்டு, பின்னர் இன்று காலை கைதானதாக கூறப்பட்ட ஹம்பாந்தோட்டை மேயர் இராஜ் பெர்னான்டோ பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கியுடன் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை விரட்ட ஓடிய சம்பவத்தின் பின்னணியில் பிரபலமான குறித்த நபர் பல்வேறு அதிகார துஷ்பிரயோக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
இந்நிலையில், பம்பலபிட்டி கொத்தலாவல அவுனியுவில் அமைந்துள்ள காணியொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த காவலர்களைத் தாக்கியிருந்தமையும் அதில் ஒருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment