தான் சிறைச்சாலைகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டதாக ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என தெரிவிக்கிறார் லொஹான் ரத்வத்த.
சம்பந்தப்பட்ட அமைச்சர் என்ற வகையில் கைதிகளை நலம் விசாரிக்கவே தான் குறித்த சிறைச்சாலைகளுக்குச் சென்றதாகவும் அதற்குரிய உரிமை தமக்கிருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
எனினும், சர்ச்சைக்குள்ளாகியுள்ள விடய அமைச்சுப் பொறுப்பிலிருந்து மாத்திரம் விலகிக் கொள்வதாக அவர் இராஜினாமா கடிதம் அனுப்பி வைத்துள்ளமையும் சிறைச்சாலைகளுக்குள் நடிகை மற்றும் நண்பர்களை அழைத்துச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment