அரசியல்வாதியாக, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அஜித் நிவாத் கபரால் மத்திய வங்கியின் ஆளுனராக நியமிக்கப்பட முடியாது என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன.
உலகில் எல்லா நாடுகளிலும் அவ்வாறு ஒரு நடைமுறை இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வது அதற்கான வழியில்லையெனவும், அவ்வாறே அவர் அரசியலிலிருந்து விலகினால் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்பாக 'இடைக் காலம்' அவசியம் எனவும் தெரிவிக்கிறார்.
எனினும், திங்களன்று தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யும் கபரால், மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment