ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தை விசாரிக்கவென விசேட நீதிபதிகள் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
மூவர் கொண்ட இக்குழுவை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார். எழு நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருந்த போதிலும் இதுவரை 43 பேருக்கு எதிராகவே வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த தலைமையில், நீதிபதிகள் அமல் ரட்ணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க பங்கேற்கும் விசேட நீதிபதிகள் குழு விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment