இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானதன் பின்னணியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,376 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் 92 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் 51 ஆண்களும் 41 பெண்களும் உள்ளடக்கம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம், 60,810 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் அதில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment