10 வருடங்களில் திருப்பிச் செலுத்தும் வகையில் கிராமப்புற பகுதிகளின் வீதி அபிவிருத்தி மற்றும் விவசாய உற்பத்திகளின் களஞ்சிய நிலையங்களை உருவாக்குவதற்காக 500 மில்லியன் டொலர் கடன் தருமாறு உலக வங்கியை நாடியுள்ளது இலங்கை அரசு.
நாட்டின் பொருளாதாரம் இன்னும் சில மாதங்களில் பூத்துக் குலுங்க ஆரம்பிக்கும் என அமைச்சர்கள் கருத்து வெளியிட்டு வரும் நிலையில் அமைச்சுகள் சார்பில் வெளிநாடுகளில் கடன் பெறுவதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
அண்மையில் பெற்றோலிய அமைச்சரு அமெரிக்காவிடம் 250 கோடி ரூபா கடன் கோரியிருந்தமையும் பல அரபு நாடுகளிடம் கடன் பெற பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தமையும் நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment