போம்பற ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் கண்டி மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையினர்கள் இணைந்து கண்டி தேசிய வைத்தியசாலையில் புதிய கொரோனா சிகிச்சை பிரிவொன்றை நிர்மாணிக்கும் பணிக்காக 25 லட் ரூபா அன்பளிப்பு செய்துள்ளனர்.
இதற்கான வைபவம் கண்டி தேசிய வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர் அருண ஜயசேகர தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் கண்டி மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி எச். உமர்தீன் நிதித்தொகையினை கையளித்தார்.
பள்ளிவாசல் தலைவர் அப்சல் மரைக்கார், சுகாதார அமைச்சின் கோவிட் 19 கோரோனா தொற்றுப் பிரிவுக்கான பொறுப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி, மத்திய மாகாண கொரோனா செயலணியின் தலைவர் கே. ஆர். ஏ. சித்தீக் மற்றும் இலங்கைக்கான பாகிஸ்தான் வதிவிட பிரதிநிதியும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
- இக்பால் அலி
No comments:
Post a Comment