நாடளாவிய ஊரடங்கு 21ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னரான கட்டுப்பாடுகள் குறித்து விரிவான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கிறார் இராணுவ தளபதி.
ஆகக்குறைந்தது ஒரு மாத காலம் ஊரடங்கை அமுல்படுத்துமாறு சுகாதார நிபுணர்கள் கோரி வந்த நிலையில் தற்போது நான்காவது வாரமாக தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
எனினும், தினசரி மரண எண்ணிக்கை தொடர்ச்சியாக 150க்கு மேல் வெளியிடப்படுகின்ற அதேவேளை, இலங்கையின் புதிய கொரோனா தொற்றாளர்களுள் 95 வீதமானோர் டெல்டா வகையினால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் இன்றைய தினம் தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment