கடந்த டிசம்பர் மாதம் முதல் 1.2 ட்ரில்லியன் ரூபா பணத்தினை அச்சிட்டு, நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கிய மத்திய வங்கி ஆளுனர் பதவி விலகுவதாக விசனம் வெளியிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா.
மத்திய வங்கி ஆளுனராக அஜித் நிவாத் கபராலுக்கு வழி விட்டு விலகிக் கொள்வதாகக் கருதப்படும் பேராசிரியர் லக்ஷமன், தான் எதிர்பார்த்ததை விட ஆறு வாரங்கள் முன் கூட்டியே விலகுவதாக கவலை வெளியிட்டுள்ளார்.
எனினும், அவரது பதவி விலகல் தொடர்பில் ஹர்ஷ இவ்வாறு விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment