எதிர்வரும் 1ம் திகதியோடு தற்போது அமுலில் உள்ளதாகக் கூறப்படும் தனிமைப்படுத்தல் ஊரடங்கும் தளர்த்தப்பட்டு நாடு வழமைக்குத் திரும்பும் என தெரிவிக்கிறார் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.
ஆயிரக்கணக்கான உயிர்ப்பலிகளைத் தவிர்க்குமுகமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த போதிலும் பெரும்பாலான இடங்களில் மக்கள் நடமாட்டம் வழமை போன்றே காணப்பட்டு வந்தது.
ஊரடங்கு விதியை மீறியதாக ஆங்காங்கு சில நூற்றுக்கணக்கானோரை பொலிசார் கைது செய்த சம்பவங்களும் இடம்பெற்றிருந்த போதிலும் கட்டுப்பாடு போதிய பலனைத் தரவில்லையென சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment