கொரோனா முகாமைத்துவம், அரச நிர்வாகத்தில் முழுமையாக தோல்வி கண்டுள்ள அரசாங்கம் அதனை மறைப்பதற்கான நடவடிக்கைகளை மாத்திரம் மேற்கொண்டு வருகிறது என குற்றஞ்சாட்டியுள்ளார் சமகி ஜன பல வேகயவின் மனுச நானாயக்கார.
நாட்டு மக்களுக்கு உரையாற்றப் போவதாக தொலைக்காட்சியில் தோன்றும் ஜனாதிபதி கொரோனாவால் உயிரிழந்துள்ள 6000 பேருக்கு சிறு அனுதாபம் கூட தெரிவிக்க முடியாத மாற்று மனப்பான்மையில் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
தடுப்பூசி வழங்கல் கூட அரச - அமைச்சு வட்டங்களுக்குள்ளும் நண்பர்கள் - உறவினர்களுக்குள்ளும் முன்னுரிமை வழங்கப்பட்டு நடப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment