PHI மீது துப்பிய நபர் கைது - sonakar.com

Post Top Ad

Wednesday, 4 August 2021

PHI மீது துப்பிய நபர் கைது

 



சுகாதார பரிசோதகர் ஒருவர் மீது எச்சில் துப்பிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கிரியுல்ல, பஸ்கொலதெனிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.


கொரோனா தொற்றுக்குள்ளான புதல்வனை அழைத்துச் செல்ல முயன்ற போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இப்பின்னணியில் 48 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


டிசம்பரில் பண்டாரகம பகுதியில் இவ்வாறு ஒரு நபர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்கு 6 மாத கடூழிய சிறைத் தண்டனையும் பத்தாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment