உலகில் அத்தியாவசிய உணவுப் பண்டங்களைப் பெற்றுக்கொள்வது கடினமான நாடுகளின் பட்டியில் முதல் ஐந்து இடத்தில் இலங்கையும் சேர்ந்திருப்பதாக தெரிவிக்கிறார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி.
நாட்டின் பொருளாதாரம் அதாள பாதாளத்தில் வீழ்ந்திருப்பதாகவும் மஹிந்த ஆட்சிக்காலத்தில் உலகில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்ட போதிலும் பயனுள்ள நலத்திட்டங்கள் ஊடாக நிலைமை எதிர்கொள்ளப் பட்டதாகவும் தற்போது அவ்வாறான ஆட்சியில்லையெனவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
ஆளுந்தரப்பிலிருந்து அரசை விமர்சித்து கருத்து வெளியிடும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையும் இவை உட்பூசலின் வெளிப்பாடு என சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment