முன்னாள் பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட டி.ஐ.ஜி அஜித் ரோஹன அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலை மறுத்துள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.
அவர் சாதாரன வார்டிலேயே சிகிச்சை பெற்று வருவதாகவும் திடமாகவே உள்ளதாகவும் பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.
மங்கள சமரவீர கொரோனா தொற்றுக்குள்ளான போதும் இவ்வாறே தகவல்கள் பரவியிருந்ததுடன் அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போது அவர் இறந்து விட்டதாகவும் வதந்தி பரவியிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment