தேசிய மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகார சபையில் நிலவும் குழறுபடிகள் தொடர்பில் தகவல் வெளியிட்ட முன்னாள் சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் மருத்துவ ஜய ருவன் பண்டார சி.ஐ.டி விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த அதிகார சபையினால் அனுமதி வழங்கப்பட்ட, எதுவித பலனுமற்ற மருந்து வகையொன்று பற்றியும் நிர்வாக குழறுபடிகள் மற்றும் தகவல் அழிப்பு தொடர்பிலும் அவர் வெளியிட்டிருந்த தகவல்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் விசாரிக்கப்பட்டுள்ளார்.
பொய்யான தகவல்களை வெளியிட்டு மக்களை தவறாக வழி நடாத்த முயல்வதாக அவருக்கு எதிராக முறையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment