ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட நாமல் ராஜபக்ச ஜப்பான் பயணித்தமை தொடர்பில் எதிர்க்கட்சியினர் பல்வேறு கேள்விகளையெழுப்பியுள்ளனர்.
இதற்கு விளக்கமளித்துள்ள நாமல், தாம் அங்கு செல்வதற்கான விமானப் பயணச் சீட்டினை விளையாட்டுத்துறை ராஜாங்க அமைச்சர் ரொஷா ரணசிங்கவே தமக்கு பெற்றுத் தந்ததாகவும், ரொஷான் கடந்த 25 வருடங்களாக ஜப்பானில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.
எனினும், தாம் இருவரும் மட்டுமே அங்கு இவ்வாறு சென்றதாகவும் ஏனைய இரு அமைச்சர்கள் உத்தியோகபூர்வ விஜயம் நிமித்தமே ஜப்பான் சென்றதாகவும் நாமல் தெரிவித்துள்ள அதேவேளை குறித்த விஜயங்களை அரசு விசாரிக்கவுள்ளதாக கெஹலிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், தமக்கான விமானப் பயணச் சீட்டினை வேறு யாரும் 'வாங்கித் தரவில்லை' என நாமல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment