ரிசாத் பதியுதீன் வீட்டில் அரச பகுப்பாய்வாளர்கள் இன்று பரிசோதனை நடாத்தியுள்ளனர். வீட்டுப் பணிப்பெண் ஒருவர் இறந்ததையடுத்து உருவாகியுள்ள சூழ்நிலையில் இப்பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது.
ஹிஷாலினி என அறியப்படும் இறந்த யுவதிக்கு நீதி வேண்டும் எனக் கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருவதுடன் இவ்விவகாரம் முழுமையாக அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, ரிசாத் வீட்டில் முன்னர் பணிபுரிந்தவர்களிடமும் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதுடன் தற்போது வீடும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment