சிறைச்சாலை வைத்தியசாலை மருத்துவர் ஒருவரை ரிசாத் பதியுதீன் மிரட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை நடாத்துவதாக தெரிவிக்கின்றனர்.
தனக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக வைத்தியர் ஒருவர் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முறைப்பாடு தெரிவித்துள்ள நிலையில் இது குறித்து விசாரிக்கப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ரிசாத் பதியுதீனை வரிசையில் வருமாறு கூறியதற்காகவே தான் மிரட்டப்பட்டதாகவும், தன்னை இடமாற்றம் செய்ய முடியும் என தெரிவித்ததாகவும் தனது சிறப்புரிமை மூலம் தன்னால் செய்யக் கூடிய காரியங்கள் இருப்பதாகவும் மருத்துவரை எங்காவது ஓடி ஒளியுமாறு தெரிவித்ததாகவும் முறையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment