கொரோனா முகாமைத்துவத்தை முறையாக மேற்கொள்ளாத அரசின் தவறுகளுக்கு மக்கள் பொறுப்பில்லையென தெரிவிக்கிறார் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
உலக சுகாதார அமைப்பு கூட, விசேட நிபுணர் குழுவொன்றின் ஈடுபாட்டுடனான திட்டமிடல் அவசியம் என தெரிவிக்கின்ற போதிலும் அரசாங்கம் தொடர்ந்தும் கொரோனா முகாமைத்துவத்தை இராணுவமயப்படுத்தியுள்ளது. இந்நிலையில், மக்களை அர்ப்பணிப்புடன் தியாகம் செய்யுமாறு கோருவதற்கு அரசுக்கு எந்தத் தகுதியும் இல்லையென அவர் விளக்கமளித்துள்ளார்.
கொரோனா முகாமைத்துவத்துக்கான விசேட நிபுணர் குழுவொன்றை அமைக்குமாறு தொடர்ச்சியாக ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment